கமநலச்சேவைகள் உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்றும் அதன் ஊடாகவே அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒருபோகம், இருபோகத்துக்கு மாத்திரமன்றி பல சந்ததியினரை பயன் பெறச்செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும் என்றும் இது தொடர்பாக விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன் ஊடாகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.