செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அனைவரும் அமெரிக்கா போன்ற திருடர்கள் அல்லர்!

அனைவரும் அமெரிக்கா போன்ற திருடர்கள் அல்லர்!

1 minutes read

அனைவரும் தங்களை போன்ற திருடர்கள் என அமெரிக்கா நினைத்துக்கொண்டிருப்பதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவத் தளங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

குறிப்பாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்திருந்தது.

அத்தோடு சீனா அதன் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள சீனா, ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டிருந்த இராணுவத் தளத்தையும் படையினரையும் அமெரிக்கா நீக்கிக்கொண்டிருந்தாலும் வெளிநாடுகளில் சுமார் 750 தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தரவுகளின் பிரகாரம் வெளிநாடுகளில் அமெரிக்காவினால் படைத்தளங்கள் நிறுவப்பட்டிருக்கும் இடங்கள் அடங்கிய உலக வரைபடமொன்றையும் சீனத்தூதரகம் வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More