யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாகத் தெரிவு!
இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர்.
எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் நீதிபதிகளாக அவர்கள் செயற்படவுள்ளனர்.
ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், தர்மலிங்கம் பிரதீபன் , தேஷெபா ராஜ், சுபாஷினி தேவராஜா மற்றும் நிரஞ்சனி முரளிதரன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.
நீதிபதிகளுக்கான பதவி நியமனத்துக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்தே இவர்கள் நீதிபதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் வெற்றியீட்டிய ஐவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நேர்சிந்தனை ஆழ்ந்த அறிவு என்பவற்றின் அறுவடை… என்பதை நினைத்து எமது தமிழ் சமூகம் பெருமை கொள்கிறது.