செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

1 minutes read

நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , 

‘இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பீ.1.617.2.28 துணை அலகிற்கு மேலதிகமாக , ‘பீ.1.617.2.104’ என்ற புதிய துணை அலகொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இலங்கையில் உள்ள டெல்டா மாறுபாடுகள் இப்போது இலங்கையில் தோன்றிய இரண்டு தனித்துவமான துணைப் பரம்பரைகளைக் கொண்டுள்ளன. 

இவை ‘ ஏ.வை.28 – ஏ.வை.104 (AY.28 • AY.104)’ என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. 

இலங்கையில் இப்போது மூன்று கொவிட் திரிபு வகைகள் உள்ளன, அவை இலங்கையில் தோன்றியவையாகும். 

அவற்றில் முதலாவதாக இனங்காணப்பட்டது பீ.411 ஆகும்.’ என்று விளக்கமளித்துள்ளார். 

‘ பீ.411 திரிபு 2020 டிசம்பரிலும் , பீ.1.1.7 கடந்த ஏப்ரலிலும் , பீ.1.617.2 கடந்த ஒக்டோபர் இறுதியிலும் இனங்காணப்பட்டுள்ளதாக’  அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More