நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன் தரமற்ற அரசாங்கம் உள்ள நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும், தரமற்ற ஆட்சியை அகற்றுவதே செய்ய வேண்டிய வழி.
தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தையும் விவசாய மக்களின் வாழ்வையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.