அதாவது ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஏ320 எயார்பஸ் விமானம் 5.45 க்கு புறப்பட்டு, இரவு 7.55 க்கு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன்போது 146 பயணிகள் மற்றும் 11 பணிகுழாம் உறுப்பினர்கள் உட்பட 156 பேர் இந்த விமானத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த அனைவரையும் மற்றுமொரு விமானத்தின் ஊடாக மீள அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.