தேயிலைத் தூள் ஒரு கிலோவின் விலை சந்தையில் 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் தமக்கு ஒரு கிலோ பச்சைக் கொழுந்திற்கு 83 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு முதல் பச்சைக் கொழுந்து ஒரு கிலோவின் விலை 100 ரூபாவுக்கும் மேல் கிடைத்த போதிலும் தற்போது கிடைக்கும் தொகை மிகக் குறைவானது. அதிலும் கிடைக்கும் 83 ரூபாவிலும் 3 ரூபாவை போக்குவரத்து செலவுக்காக தேயிலைக் கொழுந்து சேகரிப்போர் அல்லது தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறவிடுகின்றனர் எனக் கொழுந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் தேயிலைத் தூளின் விலை அதிகரிப்பு தமக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் அதன் விலை அதிகரிப்புக்கு ஏற்றாற் போல் பச்சைக் கொழுந்தின் விலையும் அதிகரிக்கப்படாமை அநீதியான செயல் எனவும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.