சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தொடர்பான இறுதி தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் மேற்கொள்ளவில்லை.
கட்சி என்ற ரீதியில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இறுதி தீர்மானத்தை கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்வாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.