கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக அதாவது கொவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையை அடையாவிட்டாலும் கூட , இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.