ஊடங்கள் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடக நிறுவன புதுக் கட்டட திறப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் குரல் ஓங்கி ஒலித்து நிற்கும் இந்த வேளையில் அவை மக்களுக்காக நிற்க வேண்டும். சமூகத்தில் மக்களை வாழ வைக்கும் ஒரு படியாக ஊடகம் இருக்க வேண்டும்.
அத்துடன் கலைகளை வளர்க்கும் பங்கும் ஊடகத்துக்கு உள்ளது. கலைகள் தொடர்ச்சியானவை. ஆகவே அதற்கான பயிற்சிகளை பெற்று அதனையும் நாம் வளர்க்க வேண்டும்.
ஊடகம் நடுநிலை என்ற படியில் இருந்து இறங்க கூடாது. மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாய் ஒருமுறை ஊடகம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டால் அதுவே சிறப்பு.- என்றார்.