செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு பிரதேச செயலாளர் இடமாற்றம் ரத்து

மட்டக்களப்பு பிரதேச செயலாளர் இடமாற்றம் ரத்து

1 minutes read

திடீர் என்று க.சித்திரவேலின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது இவர் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக நேற்று  முதல் நியமிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

மேலும் அரசசேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களின் பிரகாரம் தற்போது கிழக்கு மாகாண கல்வியமைச்சில் மேலதிக செயலாளராக பணிபுரியும் க.சித்திரவேல்(சட்டத்தரணி) நேற்று திங்கட்கிழமை (28-02-2022) முதல் கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் எஸ். எச் முஸமில் கிழக்கு மாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இந்த இடமாற்றம் கடந்த 22-02-2022ஆம் திகதி பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் முஸ்லிம் பிரதேச செயலகம் ஒன்றுக்கு தமிழர் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதனை ரத்து செய்ய வேண்டுமென பல பொது அமைப்புக்களும் பொதுவெளியில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More