கண்டி எசல பெரஹெராவின் புனித பேழையை அதிகளவான தடவைகள் சுமந்து சென்ற யானையான ‘நெதுன்கமுவே ராஜா’ உயிரிழந்துள்ளது.
69 வயதான குறித்த யானை இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக, கண்டி தலதா மாளிகை அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த குறித்த யானை, நோய் வாய்ப்பட்ட நிலையிலும் கடந்த வருட ஶ்ரீ தலதா மாளிகை புனித பேழையை சுமந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
‘நெதுன்கமுவே ராஜா’ மரணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுதாபம் வெளியிட்டுள்ளார்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW