அனைத்து வீதி விளக்குகளையும் இன்று(07) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை செயற்படுத்தாதிருக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
நாளாந்த வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, மின்சாரத்தை சேமிப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பசில் ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக பொதுஜன பெரமுன வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய மின்னுற்பத்தியில் 30 வீத பங்களிப்பு வழங்கும் நீர்மின்னுற்பத்தி நிலையங்கள், மழையின்மையால் செயலிழந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது