1
மாகம்புர லங்கா கைத்தொழில் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான லங்வா சங்ஸ்தாவின் சீமெந்து உற்பத்தி செயற்பாடுகள் இன்று(07) ஆரம்பிக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதிய சீமெந்து தொழிற்சாலையை திரை நீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பின்னர் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.