1
பிரதான மார்க்கத்தின் பொல்கஹவெல – அலவ்வ இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பிரதான மார்க்கத்துடனான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.