ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனை குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
01 – பேராசிரியர் H.D. கருணாரத்ன
02 – பேராசிரியர் ஷிரன்த ஹீன்கெந்த
03 – கலாநிதி துஷ்னி வீரகோன்
04 – தம்மிக பெரேரா
05 – கிரிஷான் பாலேந்திரா
06 – அஷ்ரப் உமர்
07 – கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
08- விஷ் கோவிந்தசாமி
09 – எஸ். ரெங்கநாதன்
10 – ரஞ்சித் பேஜ்
11- சுரேஷ் டி மெல்
12 – பிரபாஷ் சுபசிங்க
13 – துமிந்த ஹூலங்கமுவ
14- சுஜீவ முதலிகே
ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் அடங்குகின்றனர்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் Changyong Rhee உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியிடப்படவில்லை.
சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை நேற்று (14) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.