இலங்கை மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக பரவுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கில பத்திரிகையில் வௌியான தகவலை நிராகரித்த ஜனாதிபதி ஊடகப்பிரிவு, சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முக்கிய விடயங்களை தவிர்த்து, அதிகாரிகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு முழுமையான நம்பிக்கையுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.