0
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14 வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.