அடக்குமுறை சட்டம், வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதுதான் உங்களுக்கு புரியும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் அன்றே கூறியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அன்று வடக்கில் பல்கலைக்கழக மாணவரான திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
இந்த அடக்குமுறை சட்டம், வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதான் உங்களுக்கு புரியும் எனக் கூறினார்.
இந்த பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை முன் கூட்டியே கண்டதன் காரணமாகவே திலீபன் என்ற அந்த இளைஞன் இதனை கூறியிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.