இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் பயணித்து, மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஜெசிந்தா லாசரஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .
தமிழகத்தின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு விஜயம் செய்த ஆணையாளர், இலங்கைத் தமிழர்களின் நலன்கள் தொடர்பில் நேற்று (24) கேட்டறிந்து கொண்டார்.
இதனிடையே, இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சிப்பவர்கள் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக தப்பிச்செல்லும் பகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.