கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய பல நாடுகளை போல கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இலங்கையை மோசமாக பாதித்துள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2020 -21 கட்டுப்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதித்தன என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் பணவீக்கம் கடனை மீள செலுத்தவேண்டிய கடப்பாடுகள் இலங்கைக்கு சவாலான பொருளாதார நிலையை உருவாக்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பலவீனமான நிலையில் உள்ள சமூகங்கள் எவ்வாறு எதிர்பாராத அதிர்ச்சிகளை எதிர்கொள்ளநேரிடும் என்பதே சமீபத்தைய கடினமான பாடம் என தெரிவித்துள்ளார்.