அரச குடும்ப நல சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
விசேட தரத்திலுள்ள குடும்ப நல சுகாதார வைத்திய அதிகாரிகளின் பதவிகளை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து தாம் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்புடன் சுகாதார அமைச்சு முன்றலில் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் குருணாகல் போதனா வைத்தியசாலைகளின் அரச கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்ப சங்கத்தினரும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிகத்துள்ளனர்.