நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதான மேலும் 6 பேருக்கு ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.