சமூக ஊடக செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தண்டனைக் கோவை சட்டத்தின் 120 ஆம் பிரிவின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் கம்பளை- ஏத்கால பகுதியை சேர்ந்தவராவார்.
கொழும்பு 6 ஆம் இலக்க நீதவான்நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW