மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டை நிறுத்தக் கோரி மின்மாற்றி மீது ஏறி குறித்த நபர் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.