அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி பொதுமக்கள் இன்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் பஹல மாரகஹ வெவ சந்தியில் மக்கள் இரண்டு தடவைகள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட்டனர்.
வெலிமடை – கெப்பட்டிப்பொல நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்களும் பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
வெலிமடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக இன்று அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் டயபரா பிரதேசத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராதனை வியாபாரிகளும் இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ஒருவழித் தடத்தை அவர்கள் மறித்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புற பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களது ஒத்துழைப்புடன், நகர மத்தியில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
நியாகம – தல்கஸ்வில பகுதியிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புலத்கொஹுபிட்டியவிலும் மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.