கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகங்களின் தகவல்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, 24 கரட் தூய தங்க பவுன் ஒன்றின் விலையானது 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 175,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது 2 இலட்சம் ரூபாவை கடந்திருந்ததுடன், தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு. இதனால் தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகைக்காலம் அண்மிக்கும் நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளமையானது பொது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாக அமையும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.