நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாடசாலைகள் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இயங்கவில்லை.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், இம் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் பாடசாலையின் புதிய தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, இவ்வாண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாத்தால் நீடிப்பதன் மூலம் இதற்கு தீர்வு வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த காலப்பகுதிக்குள் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.