செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை நிலவரத்தை மிகைப்படுத்துகின்றனவா இந்திய ஊடகங்கள்?

இலங்கை நிலவரத்தை மிகைப்படுத்துகின்றனவா இந்திய ஊடகங்கள்?

2 minutes read

இலங்கையில் சமகால நெருக்கடி நிலமைகள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் பல பொய்யான தகவல்களை பரப்பி , உலகளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இலங்கை மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கல்வி அறிவுள்ள மக்களை கொண்டு நாடுகளில் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியுள்ளன.

இது குறித்து சர்வதேச ரீதியாக ஊடகங்கள் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அதில் குறிப்பாக இந்திய ஊடகங்கள் , இலங்கை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான பல போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பலர் இவ்வாறு போலியான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இலங்கையில் மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதாகவும் பட்டினியால் மக்கள் மரணமடைவதாகவும், செய்தி வெளியிடப்படுகின்றன.

அடுத்த வேளை உணவு இல்லாமையினால் அடுத்தவர்களின் உணவுகளை தட்டிப்பறித்து இலங்கை மக்கள் உண்பதாகவும் பொய்யான புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டு இலங்கை மக்களின் மனங்களை இந்திய ஊடகங்கள் புண்படுத்தி வருகின்றன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக யாரும் யாரிடமும் கையேந்தும் நிலையிலோ அல்லது தட்டிப்பறித்து உண்னும் நிலமையிலோ இல்லை. இங்கு எரிபொருள், எரிவாயு, சில அத்தியாவசிய பொருட்களுக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் கொழும்பு உட்பட பல பிரதான நகரங்களில் பட்டினியால் யாரும் கஷ்டப்பட்டதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் மக்கள் சில நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளமை யதார்த்தமாகும்.

இவ்வாறான நிலையில் உண்மைதன்மைகளை அறியாது தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் பல யூரியூப் சனல்கள் பல போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. மிகவும் பிரபலமான யூரிப்பர் ஒருவர் இலங்கையில் பாண் ஒன்றின் விலை 2000 ரூபா என செய்தி வெளியிட்டு வருகிறார். உண்மை அதுவெல்லவே.

அதில் சிலர் , இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் உணவுகளை பறித்து உண்பதாகவும், அவர்களிடம் பிச்சை கேட்பதாகவும் மிகவும் கொச்சப்படுத்தும் வகையில் போலித் தகவல்களை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் என்ற வகையில், நீங்கள் வருமானம் ஈட்டுவதற்காக உண்மைக்கு புறம்பான போலியான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர். 

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மீள முடியாதது என்பது ஒருபுறமிருக்க, மக்கள் சுற்றுலாப் பயணிகளிடம் பறித்து உண்ணும் அளவிற்கு தங்கள் சுயத்தை இழந்துவிடவில்லை என்று சமூக வலைத்தளங்களில் இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு இலங்கை மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More