உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார்.
உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கியதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தில், 7.3 கோடி பங்குகள் இவர் வசமாகின.
இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.