செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச நிதியை மோசடி செய்தவர்கள் தப்பிச் செல்லாதவாறு தடை விதிக்க வேண்டும் | சரத் பொன்சேகா

அரச நிதியை மோசடி செய்தவர்கள் தப்பிச் செல்லாதவாறு தடை விதிக்க வேண்டும் | சரத் பொன்சேகா

1 minutes read

அரச நிதியை மோசடி செய்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் நாட்டை விட்டு தப்பித்து  செல்ல முடியாத அளவிற்கு தடைவிதிக்க வேண்டும். ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும். மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும் என  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு அரசாங்கம் வினைத்திறான தீர்வு வழங்காத காரணத்தினால் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினை,மக்கள் ஏன் வீதிக்கிறங்கி போராடுகிறார்கள் என்பது குறித்து ஆளும் தரப்பு கவனம் செலுத்தவில்லை ஏனெனில் அவர்களுக்கு மூன்று வேளை உண்ண உணவும்,ஏனைய வசதிகளும் முழுமையாக கிடைக்கப்பெறுவதால் அவர்கள் மக்களின் பிரச்சினைகள்கு குறித்து அக்கறை கொள்ளவில்லை.

கோ ஹோம் கோடா என்ற எதிர்ப்பிற்கமைய ஜனாதிபதி மாத்திரம் பதவி விலகுவதை ஏற்க முடியாது.ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வந்த அனைவரும் ஒன்றினைந்து பதவி பதவி விலக வேண்டும்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையிலும் அரசாங்கம் ஊழல் மோசடியை தவிர்த்துக்கொள்ளவில்லை.

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நாட்டை விட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.அரச நிதியை மோசடி செய்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுககு ஆதரவு வழங்கியவர்கள்  நாட்டை விட்டு தப்பித்துச்செல்ல முடியாத வகையில் தடைவிதிக்க வேண்டும்.

மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும். அரச நிதியை மோசடி செய்வதர்களுக்கு நிச்சயம்  பாரபட்சமின்றிய வகையில் தண்டனை பெற்றுக்கொடுப்போம். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More