எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு அரச நிர்வாக அமைச்சு அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்களை பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சுற்றறிக்கையின்படி, 2022 ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் , இம்மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.