நாளை (11) முதல் எதிர்வரும் வாரத்தில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஏப்ரல் 11 – 12: இரு கட்டங்களில் 4 மணி நேர மின்வெட்டு:
ABCDEFGHIJKL :
– மு.ப. 8.30 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – பி.ப. 10.45 வரை 1¾ மணித்தியாலங்கள்
PQRSTUVW :
– மு.ப. 10.45 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – இரவு 10.45 வரை 1¾ மணித்தியாலங்கள்
ஏப்ரல் 16 – 17: 2¼ மணி நேர மின்வெட்டு:
ABCDEFGHIJKLPQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 6.00 மணி2¼ மணித்தியாலம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 13, 14, 15 ஆகிய 3 நாட்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.