நுவரெலியா – இறம்பொடை நீர்வீழ்ச்சியை அண்மித்து நீராடச்சென்று காணாமற்போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாப்பயணம் சென்ற இளைஞர், யுவதிகள் சிலர் நேற்று (12) பிற்பகல் கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீராட முயற்சித்துள்ளனர்.
இதன்போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்தமையினால் 07 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டதுடன், ஏனைய மூவரும் காணாமற்போயினர்.
வவுனியாவை சேர்ந்த 21, 22 வயதான இரண்டு யுவதிகளும்19 வயதான ஒரு இளைஞருமே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டனர்.