எதிர்வரும் வாரமளவில் 7,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 26, 28 ஆம் திகதிகள் குறித்த கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
26 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள எரிவாயுவை மறுநாள் தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதால், நாளாந்தம் 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.