0
அமைச்சரவை பேச்சாளராக, வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையின் நேற்று (25) இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் அமைச்சரவையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சரவை இணை பேச்சாளர்களாக, கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண மற்றும் மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோரையும் நியமிக்க அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.