செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசிய பரீட்சைகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு !

தேசிய பரீட்சைகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு !

1 minutes read

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் ஏற்கனவே திட்டமிட்டுள்ள படி 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் மே மாதமும் , இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் ஒக்டோபர் மாதமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி நிறைவடையும்.

அதற்கமைய மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

இம்முறை 4 இலட்சத்து 7129 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் , ஒரு இலட்சத்து 1367 தனியார் பரீட்சாத்திகளும் சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலை தோற்றவுள்ளனர்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் 3841 பரீட்சை நிலையங்களும், 542 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதே போன்று இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16 ஆம் திகதி இடம்பெறும். அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More