பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவீர்களா என பிரதமர் இதன்போது கேட்டுள்ளதுடன், மக்கள் நலன்சார்ந்த மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாக எம்.ஏ. சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
தான் அமைக்கவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழுவிற்கு தலைமைத்துவம் வழங்க தயாரா என பிரதமர் இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் வினவியுள்ளார்.
இதன்போது, பாராளுமன்றத்தின் கீழ் அமைக்கப்படும் சட்ட மறுசீரமைப்புக் குழுவிற்கு தலைமைத்துவம் வழங்க இணக்கம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.