தேசிய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதம் அனுப்பும் நடவடிக்கைகள் இன்று (20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த, புதிய கல்வியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறைக்காலம் நிறைவடையும் போது, இது தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.