சென்னையிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளது.
தமிழ் நாட்டு அரசு சார்பில் எமது நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் 40 ஆயிரம் தொன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்து பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால் மா ஆகிய அத்தியாவசிய பொருட்கள் ‘டான் பின்-99’ என்ற சரக்கு கப்பலில் கடந்த புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW