கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரும் சம்பவத்தின் போது காயமடைந்துள்ளதால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.