தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி பாராளுமன்ற உறுப்பினர், எம்.ஏ. சுமந்திரனின் வீட்டுக்கு அருகில் யில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெள்ளவத்தை தயா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்த 22 வயதான குறித்த சிப்பாய் தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மூலம் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.