அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்று பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பி மூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவடை
கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் அறுவடை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டும் எரிபொருள் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எரிபொருள்
இன்னும் சில நாட்களுக்குள் எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் நெற்கதிர்கள் சேதமடைந்துவிடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு எமது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எமக்கு எரிபொருளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.