அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பில் நீர் வழங்கல், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உள்ளடக்கப்படவில்லை.
அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமையில் விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று(13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையில் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.