பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்
நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை 08 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரானார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மிக்க சூழலையடுத்து, நிதியமைச்சு பதவியிலிருந்து அண்மையில் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.