இராணுவ உயர் அதிகாரி ஒருவர் குருணாகல், யக்கபிட்டிய பிரதேசத்தில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்ட குறித்த அதிகாரி தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவ வீரர்கள் நபர் ஒருவரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில், இராணுவ அதிகாரி ஒருவர் அவரை காலால் தாக்கும் வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.