தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு அவசியமான உதவிகளை இலங்கைக்கு வழங்கிவருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி தெற்காசியப் பிராந்தியம் மீதும், அயல் நாடுகளின் மீதும் இந்தியா விசேட அவதானம் செலுத்திவருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் புதுடில்லி பல்கலைக்கழகத்தில் ‘மோடி@ 20 :ட்ரீம்ஸ் மீற் டெலிவரி’ (Modi@20: Dreams Meet Delivery) என்ற தலைப்பிலான புத்தகம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.
மேலும் இக்கலந்துரையாடல் நிகழ்வில் ரஷ்ய – உக்ரேன் யுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் அவர் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.