0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.