நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவதற்கு கடந்த ஜூன் 13ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஜூன் மாதம் முதல் 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவையில் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.