அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் , சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 700 ரூபாவாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.